திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக DSP. இலக்கியா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்கமுத்து, ஜெயலட்சுமி ஆகியோர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சாலை தெரு பகுதியில் கடையில் வைத்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த முகமது அனிபா மகன் அபுபக்கர்(62). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 20 கிலோ குட்காவின் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா