கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ஓசூர் பேருந்து நிலையத்தில் ரோந்து அலுவலில் இருந்த போது சேலம் பேருந்து நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கு இடமாக பையை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹8,580/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்