திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியபட்டி பகுதியில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருப்பதாக S.P.பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி.உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன், பாலசுப்பிரமணி மற்றும் காவலர்கள் ரெட்டியபட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் முகமதுமைதீன்(38). என்பவர் விற்பனைக்காக வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் முகமது மைதீனை கைது செய்து வீட்டிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 133 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா