கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஜீவாடி சோதனை சாவடியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1.72000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் குட்கா பொருள்களை கடத்தி வந்த நபர்களை விசாரணை செய்ததில் குத்துபுதீன் (32) சையது அலி (33). இந்த இரண்டு நபர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இவர்கள் கடத்தி வந்த குட்கா பொருட்களையும் மற்றும் கடத்தல் உபயோகத்திற்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்