கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் to கிருஷ்ணகிரி NH ரோட்டில் ஓசூர் பேரண்டபள்ளி மலர் ஏலமையம் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹2,04,400/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள், வெளிமாநில மதுபான பாக்கெட்கள் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள், மதுபானங்ளை கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள், மதுபானங்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்