கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 52.9920 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தன. மேலும் காவல் துறையினர் வாகனத்தையும் கைப்பற்றி குட்கா கடத்தி வந்த நபரையும் காவல் துறையினர் கைது செய்து. விசாரணை செய்ததில் அஜித்குமார் (26). சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது . மேலும் காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்