இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு 29.01.2020 ம் தேதி இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. கீதா அவர்கள் மற்றும் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மனோகரன் அவர்கள் ஆகியோர் தலைமையில் 10 காவல் ஆய்வாளர்கள், 31 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 125 காவலர்கள் ஆக மொத்தம் 168 நபர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் சிறப்பு ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்த 84 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது சம்பந்தமாக இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவிக்கையில் குட்கா பொருட்கள் விற்பனை போன்ற சட்ட விரோதமான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்