கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூ வாடி சோதனை சாவடி அருகில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். நிறுத்தியிருந்த வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹1,70,400/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. மேற்கண்ட குட்கா பொருட்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்