கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி to தர்மபுரி NH ரோட்டில் திம்மாபுரம் சுப்பிரமணியபுரம் PDS ஜமுனா பேக்கரி எதிரில் வாகனத் தணிக்கை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹2,11,000 /- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வாகனத்துடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
















