கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To உளியாளம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹1,28,144/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.