கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே அட்கோ போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் வெளிமாநில மதுபான பாக்கெட்கள் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் மற்றும் மதுபானங்களை கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள், மதுபானங்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்