கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீஜீவாடி சோதனை சாவடியில் சிப்காட் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2.20400 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்தியது தெரிய வந்தது. மேலும் கடத்திய நபரை காவல்துறையினர் விசாரணை செய்தபோது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன் (48). என்பவர் என்று விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கடத்தி வந்த குட்கா பொருட்களையும் கடத்தலுக்கு உபயோகித்த வாகனத்தையும் சிப்காட் காவல் துறையினர் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்