கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் இரவு ரோந்து அலுவலில் இருந்தபோது (14.05.2025) ஆம் தேதி விடியற்காலை சுமார் 03.45 மணிக்கு குப்பம் To பர்கூர் ரோட்டில் காரகுப்பத்தில் உள்ள கனரா பேங்க் ATM அறையில் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனம் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததை பார்த்து அசம்பாவிதம் நிகழாமல் இருக்க வாகனத்தை நிறுத்த சொல்லி சைகை செய்த போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை சிறிது தூரம் சென்று நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். எனவும் நிறுத்தி இருந்த வாகனத்தை சோதனை செய்த போது பாக்கு மட்டைகளுக்குள் சுமார் ₹16,07,520/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது, குட்கா பொருட்களுடன் வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்