கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீஜீவாடி சோதனை சாவடியில் சிப்காட் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் தமிழக அரசியல் தடை செய்யப்பட்ட 11.74000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்தியது தெரிய வந்தது மேலும் கடத்திய நபரை காவல்துறையினர் விசாரணை செய்தபோது கரூர் மாவட்டத்தை சேர்ந்த 1.சிவகுமார்(44).
2.ரவி (44). என்பவர் என்று விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கடத்தி வந்த குட்கா பொருட்கள்1) Vimal pan masala 300.kg Rs.3,60,000/-2) Hans Chaap Tobacco 645 kg Rs . 2,58,000/-
3) cool lip 125 kg Rs.2,60,000/-4) Swagat Gold Tobacco 69 kg Rs.26,700/-5) M Scented Tobacco Gold 1.5 kg Rs. 60,000/-6) RMD Pan masala 24kg Rs.1,20,000/-7) V1 Tobacco 3.5. kg Rs. 90,000/- இவை அனைத்து பொருட்களையும் மற்றும் கடத்தலுக்கு உபயோகித்த வாகனத்தையும் ஓசூர் சிப்காட் காவல் துறையினர் கைப்பற்றி இருவரும் மேல் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்