கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோபசந்திரம் என்ற பகுதியில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் குட்கா மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரை கண்டதும் காரின் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்து சுமார் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்