திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதத்ரவின் படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் த. கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, மது விலக்கு பிரிவு காவல் துறை மற்றும் சுகாதார துறை இணைந்து இன்று போலியமனூர், பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்காக கராட்டுப்பட்டி, போலியமனூர், அரசு நடு நிலை பள்ளி அருகில் விறகு கட்டைக்குள் பதுக்கி வைத்திருந்த பீட்டர் செல்வசிங் என்ற சேகர் என்ற நபர் மீது உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டன. இந்த ஆய்வினை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் மற்றும் காவலர்கள் அருள்ராஜ், முருகன் மற்றும் சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா