கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஜூஜு வாடி சோதனை சாவடி அருகில் SSI அழகிரி மற்றும் HC – 1087 மல்லேசன் சிப்காட் துறையினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. மேலும் விசாரணையில் பால் பாண்டி -42 .பெருங்காநல்லூர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் KR புரம் மார்க்கெட்டில் இருந்து அத்திப்பள்ளி வழியாக மதுரைக்கு குட்கா பொருட்களை கடத்தியது தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்