கிருஷ்ணகிரி: மத்திகிரி காவல் நிலைய பகுதியில் தீபக் என்பவர் Wake Fit என்ற பெட் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வருவதாகவும் கம்பெனியில் ஐந்து நபர்கள் பெட் டெலிவரி செய்யும் வேலையை செய்து வருவதாகவும் (06.02.2025) ஆம் தேதி இரவு சுமார் 7.55 மணிக்கு பெட்டுகள் டெலிவரி செய்ய கணக்கு பார்த்துக் கொண்டிருந்தபோது 66 பெட்டுகள் குறைவாக இருந்ததாகவும் மேற்படி குற்றவாளிகள் வாகனத்தில் எடுத்துச் சென்று 32 பெட்டுகளை விற்று விட்டதாகவும் மீதமுள்ள 34 பெட்டுகளை குற்றவாளி தங்கி இருக்கும் ரூமில் இருந்து எடுத்து வந்து விட்டதாகவும் 32 பெட்டுகளை திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தீபக் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து திருடிய ஐந்து நபர்களில் நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 6 பெட் ,₹98,000 /- ரூபாய் பணம் பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.