திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர். நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவுப்படி நாட்டின் 77வது குடியரசு தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய வீதிகள், தலைவர்கள் சிலைகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஆகிய பகுதிகளில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினரால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநகரத்தில் குடியரசு தின பாதுகாப்பு பணிக்காக மாநகரின் சோதனை சாவடிகள் மற்றும் நகரின் முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகன சோதனையும், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழத்தல் பிரிவினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையும், முக்கிய அரசு நிறுவனங்களில் பாதுகாப்பிற்கு என மொத்தம் சுமார் 600 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















