திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 77வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். இரா.சுகுமார், இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர், நெ.மணிவண்ணன், இ.கா.ப., சரக காவல்துறை துணை தலைவர், ப.சரவணன், இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசண்ணகுமார், இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையர்கள் மரு.சி.மதன் இ.கா.ப., (மேற்கு) V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) S.விஜயகுமார் (தலைமையிடம்) மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார், இ.ஆ.ப., தேசியக் கொடியை ஏற்றி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர், சுஜாதாவின் காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். மேலும் சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு 39 நபர்களுக்கு நற்சான்றிதழ்களும், மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வரும் 48 தலைமை காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















