திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 76வது குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர், மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., மாநகர காவல் துணை ஆணையர்கள், V.கீதா, V.வினோத் சாந்தாராம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர், பேச்சிமுத்து தலைமை வகித்து வழிநடத்தி வந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 50 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கமும், சிறப்பான முறையில் பணிபுரிந்த அமைச்சுப் பணியாளர்கள் உட்பட 27 பேருக்கு பாராட்டு மற்றும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்