திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய பஜார்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் என அனைத்து இடங்களிலும் எவ்வித அசம்பாவிதமும் நடந்திடாத வண்ணம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக (23.01.2024) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்கள், கோவில்கள், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படை பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்