திண்டுக்கல் : திண்டுக்கல் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்,ஏட்டுகள் சுரேஷ் கண்ணன், முகமது அஜிஸ்கான், சீனிவாச பெருமாள், பிரகாஷ் ஆகியோர் திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டாஸ்மாக் கடை முன்பாக உள்ள பெட்டிக்கடையின் அருகே குடிமகன்களை மது குடிப்பதற்கு அனுமதித்த அக்பர் அலி (58), நாகலட்சுமி (45), பாலு (58), துரைப்பாண்டி (40), ராஜாமணி (49), மணிமேகலை (60) மகேஸ்வரன் (45), ராமச்சந்திரன் (38), ஜான் சகாயம் மேரி (52) தேவி (37)ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மாரம்பாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற சவேரியார் செல்வராஜ் (45), தாமஸ் (47) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா