கன்னியாகுமரி: நாகர்கோவில் பகுதியில் குடிபோதையில் மினி பஸ்ஸை இயக்கிய ஓட்டுநர் மற்றும் உடந்தையாக இருந்த நடத்துநருக்கு போக்குவரத்து போலீசார் மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்துள்ளனர். செட்டிக்குளம் பகுதியில் நேற்று (டிசம்பர் 10) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீசார், அந்த வழியாக வந்த மினி பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், கொடுப்பைக்குழி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெபர்சன் (48). மது போதையில் வாகனம் ஓட்டியதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மினி பஸ்ஸை பறிமுதல் செய்ததுடன், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஜெபர்சனுக்கு ரூ. 17,000 மற்றும் நடத்துநருக்கு ரூ. 10,500 என மொத்தம் ரூ. 27,500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
















