திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே மாவடி புதுரை சேர்ந்த அந்தோணி தாஸ், சுபா தம்பதியினர். அந்தோணி தாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று (07.12.2024) அவர் குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டார் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து விசாரணை அதிகாரியான ஏர்வாடி காவல் நிலைய ஆய்வாளர், சுதா நடத்திய தீவிர விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து மனைவி சுபா,(44). அவருக்கு உடந்தையாக இருந்த மகன் எபினேசர் ராஜ்குமார், (24). மகள் ஷோபனா,(21). ஜெனிபர்,(19). ஆகியோரை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்