தருமபுரி: தருமபுரி நான்கு ரோடு சந்திப்பு. இன்று பிற்பகலில் 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் திடீரென போக்குவரத்து மிகுந்த நான்கு ரோடு சாலையின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எல்லப்பன் என்பது தெரியவந்தது.
அப்போது காவல் துறையினரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது எனக்கு அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் இல்லையேல் இங்கிருந்து வரமாட்டேன் என அடம் பிடித்த அந்த நபரை பொதுமக்கள உதவியுடன் அந்த இடத்தில் இருந்து அப்புறபடுத்திய பின்னரே போக்குவரத்து சீரடைந்தது.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.
.