திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் ஏரிமேடு பகுதியில் கடந்த 10நாட்களாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டும் குடிநீர் வழங்காததை கண்டித்தும் பொதுமக்கள் பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு