திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருக, முக்கூடலை சேர்ந்த முருகன் என்பவர் 21.02.2022-ம் தேதி அன்று வேலை பார்த்துக் (contract work) கொண்டிருக்கும் போது சுமார் 3 பவுன் எடையுள்ள தங்க செயின் கீழே கிடந்துள்ளது.
மேற்படி முருகன் கீழே கிடந்த நகையை எடுத்து புதுக்குடி பஞ்சாயத்து தலைவரான திரு.சுப்பிரமணியன் என்பவரிடம் ஒப்படைத்து உள்ளார். மேற்படி திரு.சுப்பிரமணியன் அவர்கள் 3 பவுன் தங்க செயினை வீரவநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேற்படி திரு.சுப்பிரமணியன் மற்றும் முருகன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி பணவெகுமதி வழங்கினார். மேலும் தங்க நகையின் உரிமையாளர் நகையின் உரிய அடையாளம் தெரிவித்து நகையை வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.