தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள புளியரை மற்றும் மேக்கரை சோதனை சாவடிகளில் தமிழக கேரளா காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.