தங்க செயினை பறித்து சென்ற நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ காவல் நிலைய பகுதியில் சுமதி என்பவர் நல்லூர் சித்தனப்பள்ளியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருவதாகவும் தினமும் தன் பேரனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாகவும் 18.10.2023 ஆம் தேதி மாலை சுமார் 4.20 மணிக்கு தன் பேரனை பள்ளியில் இருந்து வீட்டுக்கு பினாட் கன்ஸ்ட்ரக்ஹன் ஆபிஸ் முன்பு நடந்து சென்ற போது அலசநத்தம் பகுதியை சேர்ந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டதாக அட்கோ காவல் நிலைய ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து அட்கோ போலீசார் தங்க செயினை பறித்து சென்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து தங்க செயினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் கிருஷ்ணகிரி To தர்மபுரி NH ரோடு திம்மாபுரம் மேம்பாலத்தில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹50,000/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது.குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து, புகையிலை பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அனுமதியின்றி மண் கடத்தி வந்த நபர், மண் கடத்திய வாகனத்தை பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது திருப்பத்தூர் To பர்கூர் சாலையில் தண்ணீர் பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி மண் கடத்தி வந்த நபர் போலிசாரை பார்த்து ஓடிவிட்டதாகவும் அனுமதியின்றி மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக இளைஞர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய ராயக்கோட்டை ஹவுஸிங் போர்டு பகுதியில் தபரிஷ் என்பவர் ஓசூர் ஜீ மங்கலம் பகுதியை சேர்ந்த பிரவின் என்பவர் BE படிப்பை முடித்து இருப்பதாகவும் இவருக்கும் மற்றும் அவரது நண்பர்கள் இருவருக்கும் ஓசூர் டாடா கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக 03.09.2023 ஆம் தேதி மூன்று நபர்களிடமும் தலா ஒரு லட்சம் விதம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக 17.10.2023 ஆம் தேதி பிரவின் ஓசூர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓசூரில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே ஜூஜூவாடி திருவள்ளுவர் நகரில் அரசு அனுமதியின்றி 85 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 40) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்து பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் நேற்று தொடர் நடவடிக்கையாக அதே பகுதியில் போலீசார் அதிரடி ஆய்வு செய்து தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 32 அட்டை பெட்டிகளில் பட்டாசுகளை அனுதியின்றி பதுக்கி வைத்திருந்ததாக வெங்கட விஜயன் (28) என்பவரை போலீசார் கைது செய்து பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்