கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களைச் சிறுவர்கள் ஓட்டினால், பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி அக்ஷய் அனில் வகாரே எச்சரித்துள்ளார். ஓசூரில் அண்மையில் 3 சிறுவர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதைப் பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற தகுதியான வயதை எட்டாத சிறுவர்களுக்குப் பெற்றோர் இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை வழங்கக் கூடாது. இதை போலீஸார் கண்காணித்து வருவதுடன், அவர்கள் விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு 3ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும். சிறுவர்கள் ஆபத்தை உணராமல் 200,250 சீC வாகனங்களை அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையிலும் ஓட்டுகின்றனர். எனவே பெற்றோர் இதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். விதி மீறும் சிறுவர் அல்லது சிறுமிக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது. இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்