கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் அதிரடி உத்தரவு. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை பற்றியோ, அவரது பெயர், முகவரி, நிழற்படம், குடும்ப விபரங்கள், பள்ளி, அக்கம்பக்கத்தார் அல்லது குழந்தையின் அடையாளத்தினை வெளிப்படுத்தகூடிய ஏதேனும் பிற விபரங்கள் உட்பட, ஏதேனும் ஊடகம் அல்லது சமூக வலைதளங்களில் வெளியிட்டால் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் (POCSO) பிரிவு 23-ன் படி மேற்படி விவரங்களை வெளியிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்