கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 240 மாணவர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவர்கள் மற்றும் குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் 480 மாணவர்கள் என மொத்தம் 1,320 மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்