கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி உட்கோட்டம் காவேரிபட்டினத்தில் கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் திரு. சங்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
















