கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 3,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ 15,000 மதிப்புள்ள குட்கா அதனுடன் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், லாட்டரி, கஞ்சா, குட்கா விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்