கிருஷ்ணகிரி : ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும் கத்தியால் குத்தி கொன்ற பின்னர் வீடுகளுக்கு தீ வைத்து சென்றுள்ளனர். மூன்றும் புதன்கிழமைகளில் நிகழ்ந்ததால், போலீசார் இவர்களை ‘புதன்கிழமை கொலையாளிகள்’ எனக் குறிப்பிடுகின்றனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்