கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர் தீபராம் (32), இவர் கிருஷ்ணகிரியிலிருந்து வேலுாருக்கு, குட்கா பொருட்கள் கடத்திய போது, கடந்த மாதம் வேலுார் வடக்கு காவல்துறையினர், கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். இவர் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திரு. குமாரவேல் பாண்டியன், அவர்களுக்கு, எஸ்.பி., திரு. ராஜேஸ் கண்ணன், பரிந்துரை செய்தார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையிலுள்ள அவரிடம் இன்று வழங்கினர்.