கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி, சத்யசாய் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (50), சற்று மனநலம் பாதித்தவர். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் குணமாகாததால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் , உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.