கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய பகுதியில் ஆஞ்சேரிமலை புளியமரத்து பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 150 லிட்டர் ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து இரண்டு குற்றவாளிகளுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















