விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல்துறை மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக உலக தண்ணீர் தின விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் பா. அசோக் குமார் முன்னிலை வகித்தார். விழாவினை முன்னிட்டு, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டது. மேலும், தண்ணீரை சிக்கமான பயன்படுத்த வேண்டும், தண்ணீரை பாதுகாக்க வேண்டிய கடமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், எஸ்.பி.எம்.பிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், சட்ட ஆலோசகர் செந்தில்குமார், சமுத்திரம் டிரஸ்ட் நிர்வாகி முத்துராஜா, அன்னை தெரசா நற்பணி மன்ற தலைவர் அருண்குமார், தினேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்