திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் ஆண்டனி செல்வம்(40).என்பவர் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கிரிப்டோ கரன்சி மாற்றத்தில் பண மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டதாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான முகம்மது ரியாஸ், (36). அய்யாதுரை (37). இசக்கிமுத்து (28). ஆகிய மூவரும் அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோ கரன்சி தேவைப்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து ரூ.75 லட்சம் மதிப்பில் 82,691 அமெரிக்க டாலர் கிரிப்டோ கரன்சியை முகமது ரியாஸின் மின்னணு பணப்பைக்கு (எலக்ட்ரானிக் வாலட்) மாற்றம் செய்ததால், அதற்கான தொகையை அளித்துச் சென்றனர். ஆனால், அவை கலர் ஜெராக்ஸ் என தெரிய வந்தது. ஆகவே, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்