அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி , இடையே பேருந்து சேவை தொடங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்த பிற்படுத்தப்பட்டோர், மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேருந்தை தானே ஓட்டி சென்று, சேவையை தொடங்கி வைத்தார்.