தேனி : தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் மற்றும் ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசார் இணைந்து ராயப்பன்பட்டி காவல் நிலைய கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழ்மையில் உள்ள கிராம மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கியும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியமைக்கு அக்கிராம பொதுமக்கள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.