மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், கள்ளிக்குடி காவல் நிலைய சரகத்தில் கள்ளிக்குடி உட்கடை பொட்டல்பட்டி கிராமத்தில் பிறந்த சில மணி நேரங்களிலே ஆன ஆண் குழந்தை ஒன்று முட் புதரில் கிடப்பதாக கள்ளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்று அக்குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டது. ஆனாலும் சிகிச்கை பலனளிக்காமல் அக்குழந்தை மருத்துவனையில் இறந்து விட்டது.
எனவே மேற்படி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு பிறகு குழந்தை இறப்பதற்கு காரணமாக இருந்த மேற்படி குழந்தையின் தாயான அனுப்பிரியா என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
மேலும், தாயினால் கைவிடப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மீட்பதற்கும் மேலும் அக்குழந்தையின் இறப்பிற்கு காரணமான இருந்த குற்றவாளியை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கும் விதமாக புகார் அளித்து, சமூக பொறுப்புடனும் அக்கரையுடனும் செயல்பட்ட கள்ளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் திரு. முகம்மது தயூப் அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மேலும், இது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக தகவல் அளிக்க முன் வருமாறு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு மதுரை அளிக்கப்படும் தகவல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் அளிப்போரின் ரகசியம் காக்கப்படும் என்றும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்