தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. க. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ஆகியோரின் சீரிய முயற்சியால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கிராம் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க தீர்மானம் எடுத்துக் கொண்டனர். தீர்மானம் எடுத்துக்கொண்ட பொதுமக்களையும், காவல்துறையினரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் வெகுவாக பாராட்டினர்.