மதுரை: மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்
துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சியில், கலைஞர் கருணாநிதி
வீடு கட்டும் திட்டத்தில், கிராம பொதுமக்களுடைய கணக்கெடுப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார். ஒன்றியப் பணியாளர் ரோசி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். இதே போல், விக்கிரமங்கலம் ஊராட்சியில், தலைவர் கலியுக நாதன் தலைமை தாங்கினார். உதவித் தலைவர் செல்வி செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். பானா மூப்பன்
பட்டி ஊராட்சியில், தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சிச் செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். இதேபோல் ,சக்கரப்ப நாயக்கர் ஊராட்சி, ஏரவார் பட்டி ஊராட்சியிலும் கிராமசபை க்கூட்டம் நடந்தது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி