மதுரை: மதுரை, வாடிப்பட்டி அரசு மருத்துவமனை தர உயர்த்த வேண்டும் என்று, கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் நீதிபதியிடம் கோரிக்கை எடுத்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில் நடந்தது. இந்த கூட்டத்தினை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் துவக்கி வைத்தார். யூனியன் பற்றாளர் முத்தையா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் தனலட்சுமி வரவேற்று தீர்மான அறிக்கை வாசித்தார். இந்த கூட்டத்தில், வாடிப்பட்டி நீதிமன்ற வட்ட சட்ட பணி குழுத்த தலைவர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராம் கிஷோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதில், மண்டலத்துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ராமர், கிராம நிர்வாக அலுவலர் அருள் ராணி, அஞ்சல் துறை ஆய்வாளர் மணிவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பணியாளர்கள் பாத்திமா கல்லூரி கணினி அறிவியல் பிரிவு மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதில், குறிப்பாக, வாடிப்பட்டி அரசு மருத்துவமனை யில் விபத்து மற்றும் திடீர் என்று ஏற்படும் பல்வேறு உடல் நல குறைபாட்டிற்கு முதலுதவி சிகிச்சை மட்டும் கொடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை உள்ளது. அதனால், மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்ச்சியினை, வழக்கறிஞர் செல்வகுமார்
தொகுத்து வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி