கிருஷ்ணகிரி: பகுதியில் சூளகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ஓசூர் To ராயக்கோட்டை ரோட்டில் உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு எதிரில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி கிரானைட் கல் இருந்தது கிரானைட் கல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்