கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது KGF To நேரலகிரி ரோடு சிகரலப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். மூன்று வாகனங்களை சோதனை செய்ததில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் இருந்தது. கிரானைட் கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.