மதுரை: மதுரை மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதி அருகே உள்ள இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் முத்தையா. இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு கடந்த ஏழு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக அவரது அண்ணன் செந்தில்குமார் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புற்று நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனளிக்காது மாலை 4:30 மணியளவில் ராஜபாளையம் இந்திரா காலனியில் உள்ள அவரது அண்ணன் செந்தில் குமார் வீட்டிற்கு வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பியதில், இருந்து அக்கம் பக்கத்தினரிடம் வலி தாங்க முடியவில்லை என கூறிக் கொண்டிருந்த முத்தையா, இரவு 11:30 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். இரவு நேரம் என்பதால் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், காலையில் தென்றல்நகர் பகுதியில் உள்ள கிணற்றில் அவர் கடைசியாக கொன்டு சென்ற டார்ச்லைட் கம்பு இருப்பதை கண்ட உறவினர்கள்.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்தவுடன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து முத்தையாவின் உடலை சடலமாக மீட்டு, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ராஜபாளையம் வடக்கு காவல் காவல் நிலையத்தினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்